Free Place Review

மூன்று லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட எங்கள் யூட்யூப் சேனலில் உங்கள் இடத்தை இலவசமாக ரிவ்யூ செய்கிறோம்.

ஈரோடு மற்றும் 20 கிமீக்குள் இருக்கும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்றால் நேரில் வந்து வீடியோ எடுத்துக் கொள்வோம்… மற்றவர்கள் நீங்களே வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்…

தொழிலகம், உணவகம், ஓட்டல், ரிசார்ட், கடைகள் ஆகியவற்றை ரிவ்யூ செய்கிறோம் முற்றிலும் இலவசமாக….

தங்கள் இடத்தை HD தரத்தில் வீடியோவாக எடுத்து அனுப்ப வேண்டும்.

வீடியோ குறைந்தபட்சமாக 8 நிமிடங்கள் இருக்க வேண்டும். ஷேக் இல்லாமல் நல்ல வெளிச்சத்துடன் தெளிவாக இருக்க வேண்டும்.

ஒரே வீடியோவாக அல்லது வீடியோக்களின் தொகுப்பாக we transfer மூலம் promo@askjhansi.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கண்டிப்பாக We Transfer மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

வீடியோ எடுக்கும் போது என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் அதில் பேசி அனுப்ப வேண்டும். தவறு வந்தால் பரவாயில்லை. உங்கள் குரலைக் கட் பண்ணி விட்டு எங்கள் குரலை இணைத்து வெளியிடுவோம்.

வீடியோ இதற்கும் முன் வேறெந்த சோஷியல் தளத்திலும் வெளிவந்ததாக இருக்கக் கூடாது. வேறெங்கும் வெளி வரவில்லை, இது சாணக்கியன் சேனலுக்காக எடுக்கப்பட்டது என்று அந்த வீடியோவிலேயே பேசி அனுப்ப வேண்டும்…

வீடியோ டிஸ்க்ரிப்ஷனில் வர வேண்டிய தொலைபேசி எண், முகவரி போன்ற விவரங்களையும் அதே ஈமெயிலுக்கு அனுப்பி வைத்தால் அதையும் இணைத்து வெளியிடுவோம்…

பொருட்களுக்கான ரிவ்யூவை வெளியிட இயலாது. எனினும் தயாரிப்பு கூடங்களின் வீடியோக்கள் உங்கள் பொருட்களின் பட்டியலுடன் அனுப்பி வைத்தால் வெளியிடுவோம்.

சோப்பு, சோப்புத்தூள் மற்றும் லாண்டரி கெமிக்கல்ஸ் சார்ந்த தொழிலில் நாங்கள் ஈடுபட்டிருப்பதால் அந்த தொழில் சார்ந்த பிறரின் வீடியோக்களை வெளியிட இயலாது.

இலவச வெளியீடு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே. இச்சேவையை நிறுத்தவும் அனுப்பிய வீடியோவை ஏதேனும் காரணங்களுக்காக வெளியிடாமல் இருக்கவும் சாணக்கியன் சேனலுக்கு முழு உரிமை உண்டு.

நீங்கள் ஈரோட்டுக்கு அருகில் இல்லை, தூரத்தில் தான் உள்ளீர்கள். ஆனாலும் உங்கள் இடத்துக்கே வந்து ரிவ்யூ செய்ய வேண்டுமென்றால் உங்கள் தொழிலகம் குறித்த தகவல்களுடன் promo@askjhansi.com ல் தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top